சென்னை: தென்கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தென்கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். அதாவது நவம்பர் 30-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்
நவம்பர் 30-ம் தேதி வங்கக் கடலில் காற்றுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகரும். இதன் காரணமாக 1 முதல் டிசம்பர் 3 வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.