சென்னை: தமிழ்நாட்டில் புதிய தோட்டக்கலைக் கல்லூரி, மஞ்சள் ஆராய்ச்சி மையம் மற்றும் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் போன்றவற்றை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அத்துடன் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தினக்கூலி பணியாளர்களுக்காக கட்டப்பட்டுள்ள சிற்றுண்டியகத்தையும் முதல்வர் திறந்து வைத்தார்.

தமிழக சட்டப்பேரவையின் மானிய கோரிக்கை விவாதங்களுக்கு முன்பாக சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். அதன்படி

கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடியில் பணியாற்றிவரும் தினக்கூலி பணியாளர்களின் பயன்பாட்டிற்காக கோயம்பேட்டில் ரூ. 2.67 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஓய்வுக்கூடம் மற்றும் சிற்றுண்டியகத்தையும், வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜீனூரில் புதிய தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கரூர், நாகப்பட்டினம் மாவட்டம் – கீழ்வேளூர் மற்றும் சிவகங்கை மாவட்டம் – செட்டிநாடு ஆகிய இடங்களில் புதிய வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்களையும் தொடங்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டம் – பவானிசாகரில் புதிய மஞ்சள் ஆராய்ச்சி மையம், கோயம்புத்தூர் – வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் ஆகியவற்றை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

மறைமலைநகரில் ரூ.5.85 கோடி செலவில் மறைமலை அடிகளார் சமுதாயக்கூடம் மற்றும் கோயம்பேட்டில் ரூ.2.67 கோடி செலவில் ஓய்வுக்கூடம் மற்றும் சிற்றுண்டியகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.

அதைத்தொடர்ந்து வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் கிருஷ்ணகிரி. கரூர், கோவை பகுதிகளில்  புதிய தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள், மஞ்சள் ஆராய்ச்சி மையம் மற்றும் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையங்களை முதல்வர் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டள்ள செய்திக்குறிப்பில், செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் ரூ.5.85 கோடி செலவில் மறைமலை அடிகளார் சமுதாயக்கூடம் மற்றும் கோயம்பேட்டில் ரூ.2.67 கோடி செலவில் ஓய்வுக்கூடம் மற்றும் சிற்றுண்டியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடியில் பணியாற்றிவரும் தினக்கூலி பணியாளர்களின் பயன்பாட்டிற்காக கோயம்பேட்டில் 5419 சதுர அடி கட்டடப் பரப்பளவில் 2 கோடியே 67 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஓய்வுக்கூடம் மற்றும் சிற்றுண்டியகத்தை  தமிழ்நாடு முதலமைச்சர்  திறந்து வைத்தார். இக்கட்டடத்தின் தரைத்தளத்தில், 24 இருக்கைகள் கொண்ட உணவருந்துமிடம், சமையலறை, கிடங்கு அறை மற்றும் கழிவறை வசதிகள் உள்ளன. முதல் மற்றும் இரண்டாம் தளங்களில் தலா 20 எண்ணிக்கைகள் கொண்ட படுக்கை வசதியுடன் கூடிய ஓய்வுக்கூடம், கழிவறை, குளியலறை வசதிகள் மற்றும் வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

 சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் மறைமலைநகரில் 5 கோடியே 85 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மறைமலை அடிகளார் சமுதாயக்கூடத்தை திறந்து வைத்தார். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் செங்கல்பட்டு மாவட்டம். மறைமலைநகரில். மறைமலை அடிகளார் சமுதாயக்கூடம் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.இந்த சமுதாயக்கூடம், 400 பேர் அமரும் வசதி கொண்ட நிகழ்ச்சி மண்டபம். 200 பேர் உணவருந்தும் வகையில் உணவுக்கூடம், மணமகன் மற்றும் மணமகள் அறைகள், விருந்தினர் அறைகள், சமையலறை, பொருள் இருப்பு அறை, நிறுத்துமிடம், தீயணைப்பு வாகன வசதி ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன.