பிக்பாஸை கலக்க வந்திருக்கும் புதிய வரவு குத்தாட்ட நடிகை சுஜா!

னியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாசில் புதிய வரவாக நடிகை சுஜா வாருணி வீட்டிற்குள் நுழைந்துள்ளார். நேற்று இரவு பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த அவர் தாக்குப்பிடிப்பாரா என கேள்வி எழுந்துள்ளது.

பிக்பாஸில் தொடக்கத்தில் 15 பேருடன் கலகலப்பாக சென்றுகொண்டிருந்த நிகழ்ச்சியில், 8 பேர் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில்  7 போட்டியாளர்கள் மட்டுமே மிஞ்சி இருந்தனர்.

ஓவியா வெளியேறியதில் இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் இடையே வரவேற்பு குறைந்ததை தொடர்ந்து, மீண்டும் ஓவியைவை களமிறக்க முயன்றதாக கூறப்பட்டது. ஆனால், நேற்று திடீரென சுஜா வாருணி களமிறங்கி உள்ளார்.

நேற்று (புதன்கிழமை) இரவு 10 மணிக்கு மேல் புதிய போட்டியாளராக நடிகை சுஜா வாருணி களம் இறக்கப்பட்டார்.

‘கிடாரி’ படத்தில் இடம்பெறும் ‘வண்டியில நெல்லு’ பாடல் ஒலிக்க அசத்தலான ஆட்டத்துடன் வீட்டின் மேற்கூரையிலிருந்து கயிற்றைக் கட்டிக்கொண்டு கீழே இறங்கினார்.

ஹவுஸ்மேட்கள் அனைவரிடமும் அவர்களின் தாய்மொழியில் பேசி அறிமுகப்படுத்திக் கொண்ட சுஜா, பிக்பாஸ் வீட்டை சுற்றிப்பார்த்து ரசித்தார். பின்னர் பெட்ரூமில் ஓவியா படுக்கையை தனக்காக எடுத்துக்கொண்டார்.

இவரது வருகையால் சில நிமிடங்கள் பரபரப்பாக வலம் வந்த ஹவுஸ்மேட்கள், பின்னர் ஒவ்வொருவராகப் பிரிந்து செட்டிலாகத் தொடங்கினர்.

சுஜா குறித்து வீட்டில் உள்ளவர்கள் பலவாறாக பேச தொடங்கி உள்ள நிலையில்,சுஜா, ஐந்து ஜூலிக்கு சமமானவள் என்று காயத்ரி கூறி உள்ளார்.

குத்தாட்ட நடிகையான சுஜா வருணி பிக்பாஸ் வீட்டிற்குள் குத்தாட்டம் போடுவாரா அல்லது வெளியேறுவாரா  என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
English Summary
new actress Suja entered to the Bigboss house