சென்னை:

வாக்காளருக்கு பணம் கொடுக்கக்கூடாது என்ற நிலையை உருவாக்கவே தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், மிக விரைவில் தேர்தல் நடைபெறும்  முன்னாள் முதல்வர்  ஓ.பி.எஸ். கருத்து தெரிவித்துள்ளார்

நாளை மறுதினம் நடைபெற இருந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் திடீரென ரத்து செய்துள்ளது.

டிடிவி தினகரன் அணியினிர்  பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதாக எழுந்த புகார்களை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அமைச்சர் விஜயகாஸ்கர், நடிகர் சரத்குமார் உள்ளிட்ட 30 இடங்களில் வருவமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கைப்பற்றப்பட்ட ஆவனங்களை தொடர்ந்து,  ஆர்.கே. நகர் தேர்தலை ரத்து செய்து, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியை சேர்ந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது,

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கக்கூடாது என்ற நிலையை உருவாக்கவே தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை ரத்து செய்துள்ளது. வருமானவரித்துறை கைப்பற்றிய ஆவணங்கள் அடிப்படையில் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை ரத்து செய்துள்ளது. மிக விரைவில் ஆர்.கே நகர் தேர்தல் நடைபெறும் என்றும்,

வருமானவரித்துறை கைப்பற்றிய ஆவணங்கள் அடிப்படையில்  தேர்தல் ஆணையம், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்துள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கக்கூடாது என்ற நிலையை உருவாக்கவே தேர்தல் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.