டெல்லி: தலைநகர் டெல்லியில்,  உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பத்தினரும் பாதுகாப்பாக தங்கி சிகிச்சை பெறும்  வகையில் டெல்லி மாநிலஅரசு பிரபலமான ஸ்டார் ஓட்டலான அசோகாவில் 100 அறைகளை  ஒதுக்க உத்தரவிட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.  உயர்நீதிமன்றமும் நாங்கள் அப்படி ஒரு கோரிக்கை வைக்கவில்லை என விளக்கம் அளித்தது. இதையடுத்து அந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டது.

டெல்லியில் கொரோனா நோயாகளுக்கு படுக்கை கிடைக்காததுடன், ஆக்சிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.  இந்தநிலையில் நீதிபதிகளுக்கு அசோகா ஓட்டலில் ரூம் ஒதுக்க  உத்தரவிட்ட  விவகாரம் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்துக்குள்ளானது. இது உயர்நீதிமன்றத்திலும் எதிரொலித்தது.

டெல்லி அரசின் உத்தரவு குறித்து  கருத்து தெரிவித்த டெல்லி உயர் நீதிமன்றம் ”மக்களுக்கு படுக்கைகள் கிடைக்காதபோது, நீங்கள் ஏ ன் இதுபோன்ற உத்தரவுகளை போடுகிறீர்கள். எங்களை சமாதானப்படுத்துவதா? இது போன்ற சிறப்பு வசதியை நீங்கள் உருவாக்க முடியாது. நாங்கள் அதை ஒருபோதும் கேட்கவில்லை.” இத்தகைய உத்தரவுகள் நீதித்துறை குறித்து தவறான திட்டத்தை அளிக்கின்றன என்று கடுமையாக விமர்சித்தது.

விசாரணையின்போது, அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞஙர், முதலமைச்சர், அவரது துணை அல்லது சுகாதார அமைச்சர் ஆகியோர்களுக்கு தெரியாமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

இதைத்தொடர்ந்து, அந்த  த உத்தரவு தொடர்பான கோப்புகள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா க்கு வரவழைக்கப்பட்டு , அது எவ்வாறு நிறைவேற்றப்பட்டது என்பதை ஆராய்ந்து,தற்பொழுது உத்தரவு வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்ட்டுள்ளது.

 

[youtube-feed feed=1]