சென்னை:

தேனி மாவட்டத்தில் அமைய உள்ள நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய சுற்று சூழல்துறை அனுமதி அளித்துள்ள நிலையில், நியூட்ரினோ திட்டம் குறித்து மக்களிடையே  விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வருகிற 31ந்தேதி நடை பயணம் மேற்கொள்ள இருக்கிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

இந்த நடை பயணத்தை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள  மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில், தேவாரம் அருகே பொட்டிப்புரம் கிராமத்தில் உள்ள அம்பரப்பர் மலையில் சுமார் ரூ.1,500 கோடி செலவில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது.  நியூட்ரினோ  ஆராய்ச்சி செய்வதற்கான பணியை தொடங்க  கடந்த 2011ம் ஆண்டு  சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அனுமதி அளித்தது.

அதைத்தொடர்ந்து நியூட்ரினோ  ஆய்வகம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், இந்த நியூட்ரினோ ஆய்வகம் காரணமாக  மேற்குத் தொடர்ச்சி மலைக்கு பாதிப்பு ஏற்படும் என்றும்,  அம்பரப்பர் மலையைக் குடைந்து நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தினால் தேனி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்றும், மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்றும்  சுற்றுச் சூழல் பாதிக்கப்படும்   என்று பசுமை தீர்ப்பாயத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில், நியூட்ரினோ ஆய்வகம் தொடங்க பசுமை தீர்ப்பாயம்  அனுமதி மறுத்தது. அதைத்தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த திட்டம்,  6 ஆண்டுகளுக்கு பிறகு, புதயதாக அனுமதி  வழங்கக்கோரி டாடா  நிறுவனம் மீண்டும் மத்திய அரசுடககு கடந்த ஜனவரி 5-ம் தேதி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு விண்ணப்பித்திருந்தது.

அதையடுத்து மத்திய சுற்றசூழல் ஆணையமும்,  மக்களின் வாழ்வாதாரம், நிலத்தடி நீர் பாதிக்கப்படாது என்று சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக்குழு பரிந்துரைத்ததன் பேரில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  நியூட்ரினோ எதிர்ப்பு விழிப்புணர்வு நடைப்பயணத்தை வைகோ வரும் 31ம் தேதி தொடங்க இருக்கிறார்.

ஏற்கனவே அறிவித்தபடி வரும் 31ந்தேதி,  நியூட்ரினோ எதிர்ப்பு விழிப்புணர்வு நடைப்பயணத்தை மதுரையில் வரும் 31ம் தேதி வைகோ தொடங்க இருக்கிறார். இந்த நடைபயணத்தை மதுரை பழங்காநத்ததில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

மதுரையில் இருந்து கம்பம் வரை 10 நாட்களுக்கு வைகோ நடைப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.