புளூவேல் சேலஞ்ச் விளையாட்டினால் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. அந்த விளையாட்டின் பின்னிருந்து செயல்பட்ட பெண் கைது செய்யப்பட்டதாகவும் செய்திகள் வருகின்றன. இந்நிலையில் மாணவர்களின் தற்கொலைக்கு காரணம் பெற்றோர்களின் அஜாக்கிரதையும், மற்றும் பொறுப்பற்ற தனமுமே என்னும் பாணியில் நெட்டிசன் பரணி வெங்கடாசலம் முகநூலில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த பதிவு :
”புளுவேல் கேமில் மதுரையில் வீர மரணம் அடைந்த செய்தியை பதிவிட்டு இருந்தேன். அதற்க்கு அவர்களது பெற்றோர் நிலையை பாருங்கள் என்று எல்லாம் பதிவிட்டு இருந்தார்கள்.
1) பத்தாம் வகுப்பில் நல்ல மார்க் எடு பன்னிரெண்டாம் வகுப்பில் மார்க் எடு ஸ்மார்ட் போன் வாங்கி தரேன் வண்டி வாங்கி தரேன்னு சொல்கிற பெற்றோர்கள்
2) பல கல்லூரிகளில் ஸ்மார்ட் போன் வாட்ஸ் அப் குழு வாயிலாகவே மாணவ மாணவிகளுக்கு தகவல் பரிமாறப்படுகிறது. சில கல்லூரிகளில் ஸ்மார்ட் போன் அவசியம்.
3) என்னோட பையன் அவனாவே ப்ளே ஸ்டோர்ல போயி கேம் டவுன்லோட் பண்ணி விளையாடுறான் அப்படீன்னு பெருமையா சொல்லுறது
4) பெற்றோகளிடம் தந்து குழந்தைகள் கேம் விளையாடுவது தவறில்லை என்ற மனநிலை உள்ளது. பல பெற்றோர்கள் வீட்டில் அவர்களாலேயே டேப்லெட் போன் ஸ்மார்ட் போன் வாங்கி தரப்பட்டுள்ளது.
5) பல அடித்தட்டு நடுத்தர மக்களின் வீட்டில் பிள்ளைகளுக்கு தனியாக ஸ்மார்ட் போன் இல்லாவிட்டாலும் பெற்றோர்கள் ஸ்மார்ட் போனை எடுத்து உபயோகிக்கிறார்கள்
இப்படி பல இருக்க கேம் என்ற போருக்கு பெற்றோர்களால் அனுப்பப்பட்ட அவர்களுக்கு வீர வணக்கம் வைப்பது”
இந்த பதிவுக்கு பின்னூட்டமாக ஒருவர் ” பெற்றோர்ரே காண்டி கிரஷ் விளையாடும் போது பையன் திமிங்கலம் கேம் விளையாடினால் என்ன தவறு” என பதிந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.