டில்லி
ஏர் இந்தியா விமானம் தாமதமாக கிளம்பியதற்காக பாராட்டு பெற்ற நிகழ்வு அதிசயமாக நடந்துள்ளது.
விமானங்கள் குறித்த நேரத்தில் கிளம்பாவிட்டால் அதிலுள்ள பயணிகள் பலரும் அதிருப்தி அடைவது வழக்கமாகும். ஒரு சில நேரங்களில் இதனால் வாக்குவாதங்களும் நடக்கும். இது போன்ற தகராறுகள் பல முறை பல விமானங்களில் நடந்துள்ளன. இவ்வாறு தாமதமாக கிளம்பியதற்காக பாராட்டு பெற்ற ஒரே விமான நிறுவனம் ஏர் இந்தியா ஆகும்.
ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய வந்த ஒரு வயதான பெண்மணி தனது பாஸ்போர்ட் அடங்கிய கைப்பையை விமான செக்யூரிட்டி பகுதியில் மறந்து வைத்து விட்டார். அதை அவர் விமானம் கிளம்பும் தருவாயில் தான் கண்டு பிடித்தார். அவர் அந்த விமானத்தில் இருந்து மற்றொரு விமானத்திலும் பயணம் செய்ய வேண்டி இருந்ததால் அந்த பையை கண்டு பிடித்துக் கொடுக்க வேண்டுகோள் விடுத்தார்.
உடனடியாக விமானத்தில் இருந்து வெளியே ஓடிச் சென்ற விமான பணிப்பெண் அந்த பெண்மணியின் பாஸ்போர்ட் அடங்கிய கைப்பையை கண்டு பிடித்து எடுத்து வந்து அளித்தார். அதன் பிறகு விமானம் கிளம்பிச் சென்றது. அந்த விமானத்தில் பயணம் செய்த அனைவரும் இந்த மனிதாபிமான செயலுக்காக கைதட்டி பாராட்டினர்.
விமானத்தில் மூத்த பத்திரிகையாளரான வீர் சங்கவி பயணம் செய்துக் கொண்டிருந்தார். அவர் தனது டிவிட்டரில், “ஒரு ஏர் இந்தியா விமானம் கிளம்ப தயாராக இருந்த போது ஒரு வயதான பெண்மணி பாஸ்போர்ட் பையை மறந்து விட்டதை அறிந்து கோரிக்கை விடுத்தார்.
அதற்காக அவரை கோபிக்காமல் ஓடிச் சென்று பணிப்பெண் பையை தேடி வ்ந்து கொடுத்தார், இதயமுள்ள ஏர்லைன்ஸ். அவர் எனது அல்லது உங்கள் தாயாகவும் இருக்கலாம். ” என பதிந்துள்ளார். இந்த பதிவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
On a @airindiain flight.Ready to take off but an elderly passenger just realised she forgot her passport bag at security. Annoying to wait but heartwarming to see the staff run back to look all over for it.
They found it.
An airline with a heart.
Could have been your mom or mine— vir sanghvi (@virsanghvi) March 31, 2019