‘நடிகையர் திலகம்’:: நெட்டிசன்கள் விமர்சனம்
Suguna Diwakar
சுகுணா திவாகர்
‘நடிகையர் திலகம்’ காட்சிப்பூர்வமாக நல்லதோர் அனுபவம். பல இடங்களில் கண்கலங்கிவிட்டேன். உணர்வுபூர்வமாகப் பார்வையாளர்களை ஒன்றவைப்பதை விடவும் ஒரு நல்ல படைப்புக்கு வேறென்ன வெற்றி இருக்கமுடியும்? படம் தெலுங்கு சினிமாவுலகை மய்யமாகக் கொண்டிருந்ததால் ஒரு தமிழ்ப் பார்வையாளனாகவும் சாவித்திரி ரசிகனாகவும் ‘பாசமலர்’ தங்கையையும் ‘நவராத்திரி’குறும்புக்காரப் பெண்ணையும் ரொம்பவே மிஸ் செய்தேன்.
அதிலும் ‘நவராத்திரி’ சாவித்திரியையும் சிவாஜியையும் தவிர்த்துவிட்டு யோசிக்கவே முடியாத படைப்பு. ஆண்மய்ய சினிமாவுலகில் ஒரு நடிகையின் சுயசரிதைப் படம் வருவது வரவேற்கத்தக்கது. ஆனால் தமிழில் பெரியார், காமராஜர், பாரதி என வந்த சுயசரிதைப் படங்கள் அனைத்தும் மொன்னையானவை மற்றும் மொக்கையானவை. தமிழிலும் என்.எஸ்.கே, எம்.ஆர்.ராதா, சிவாஜி, மனோரமா, சந்திரபாபு போன்றோரின் வாழ்க்கை வரலாறு சினிமாவாக வேண்டும்.
ஆனால் அதை இயக்குவதற்கு ஞானராஜசேகரன் போன்ற மொக்கையான இயக்குநர்களே இருக்கிறார்கள் என்பதுதான் தமிழர்களின் கெடுவாய்ப்பு
Prabakar Sarma
பிரபாகர் சர்மா
கீர்த்தி சுரேஷ் சாவித்திரியாகவே உருமாற்றம் ஆகி விட்டார் என்று கூறுவது மிகையில்லை. மிக நுணுக்கமாக அவரது பாத்திரப் படைப்பு வடிவமைக்கப் பட்டாலும் அதற்கு முழு பொறுப்புடன் கீர்த்தி உயிர் கொடுத்திருக்கிறார். விருது உறுதி.
அதற்கு நேர்மாறு ஜெமினி கணேசன் பாத்திரத்திற்கு துல்கர் சல்மானின் தேர்வு. துல்கர் நல்ல நடிகர் என்றாலும் இந்தப் பாத்திரத்திற்குக் கொஞ்சம் கூடப் பொருந்தவில்லை. உடல் மொழி. உடை எல்லாவற்றிலும் சொதப்பி விட்டார்.
தேவதாஸ் படத்தில் அவர்கள் பதின் பருவத்தில் ஊருக்கு வெளியில் இருக்கும் காட்டுக்குள் வரும்போதெல்லாம் ஒரு ஹம்மிங் கொடுத்தபடி வருவார்கள். அந்த ஹம்மிங்கில் ஒரு பாடல். அந்தக் காலத்தோடு பொருந்துபவர்களைப் பெருமளவில் சுலபமாகப் படத்துடன் ஒன்றிவிடச் செய்யும். ஒப்பனை, பாவம், உடல்மொழி அனைத்திலும் கீர்த்தி பிரமாதப்படுத்தியிருக்கிறார். சாவித்திரியை ரசித்தவர்களுக்கு இந்த நடிகையர் திலகம் நிச்சயம் பிடிக்கும்.
ஆனால் படம் முழுவதும் தெலுங்கு சாவித்திரியை மனதில் வைத்து எடுத்த படம் என்பது தெரிகிறது.
சந்திரபாபு கதாபாத்திரத்தை மிக சௌகரியமாக மறைத்து விட்டார்கள்.