அமைச்சர் வேலுமணி-  ஜக்கியின் அடடே தொடர்பு!

Must read

 

நெட்டிசன்:

மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் அவர்களது பதிவு:

 

 

ஒரு செம காமெடி..

காட்டை அழிச்சிட்டு நதிகளை காப்பாத்தறோம்னு 7000
கி.மீ..பயணம் கௌம்பிட்டாங்க..ஊரை சுத்தி பாக்க இப்படியும் ஒரு ஐடியா?

போகட்டும்.. துவக்க விழா மேடையில ஜக்கியோட இருக்கிறது யார்யார்னா பார்த்தா பஞ்சாப் கவர்னர் கிரிக்கெட் வீரர் சேவாக், லேடி டீம் கேப்டன் மித்தாலி ராஜ், கார் ரேஸ் நரேன் கார்த்தி..

இதுமாதிரி பிரபலங்கள வரவெச்சி சீன் போட்டுட்டு அப்புறம் வேற வகையில ஆட்டய போடறது..

இதுல விசேஷம் என்னன்னா, பல பிரபலங்களுக்கு எங்கே போறோம், எதுக்கு போறோம்ன்றதே தெரியாது.. அன்னைய கால்ஷீட்டை செகரட்ரி யாருக்கு வித்து பணம் வாங்கினானோ அங்கே போய் கலந்துக்குவாங்க..

தேரா சச்சா பாஸ்கூட இப்படி நின்னு போஸ் குடுத்த பிரபலங்களை இப்ப நல்லாவே வெச்சி செய்றாங்க.. பார்க்க அவ்ளோ கண்குளிர்ச்சியாக இருக்கு…

சரி கிளைமாக்சுக்கு வருவோம்..இந்த விழாவுல கலந்துகிட்ட இன்னொரு முக்கிய புள்ளி நம்ம அமைச்சர் வேலுமணி..

” பல விதிமுறைகளை மீறி ஆதியோகி சிவன் சிலை, மூன்று மண்டபம் கட்ட ஒரு லட்சம் சதுர அடி அளவை ஈஷா யோகா மையம் ஆக்கிரமிப்பு செய்துள்ளது” என்று
ஐந்து மாதங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது யார் தெரியுமா? இதே அமைச்சர் வேலுமணி பங்கேற்றுள்ள தமிழக அரசுதான்

அப்பன் தவறு பிள்ளைக்கு தெரிந்தால்
அவனுக்கு வெட்கமில்லை
அத்தனை பேரையும் படைத்தானே
அந்த சிவனுக்கும் வெட்கமில்லை

மேலும் கீழும் கோடுகள் போடு,அதுதான் ஒவியம்
நீ சொன்னால் காவியம்

More articles

Latest article