சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட சுவாதியை, “பாஜக பிரமுகரான கருப்பு (எ) முருகானந்தம்தான் கூலிப்படையை வைத்துக்கொலை செய்தார்” என்று தமிழச்சி என்பவர் தனது முகநூல் பக்கத்தில் தொடர்ந்து எழுதி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தமிழச்சி மீது, கருப்பு முருகானந்தம் திருவாரூர் எஸ்.பி.யிடம் புகார் அளித்தார். அதை நமது patrikai.com  இதழில் வெளியிட்டோம். கருப்பு முருகானந்தத்தின் பேட்டியும் நமது இதழில் வெளியானது..
thamilachi
இந்த நிலையில், நமது செய்தியைப் பார்த்த பிறகு தமிழச்சி ஒரு பதிவை எழுதியிருக்கிறார். அதில்,
“கருப்பு (எ) முருகானந்தம் ரெளவுடி, கொலையாளி, சமூக விரோதி, சிறுபான்மையினருக்கு எதிரி, சட்டத்தின் இருட்டறைக்குள் வீரம் காட்டும் மிருகம் என்றுதான் நினைத்திருந்திருந்தேன். அடிமுட்டாளாகவும் இருப்பார் எனவும் கணக்கிட்டேன். அதையும் உண்மை என்று நிருபித்துவிட்டார்.
கருப்பு, நேற்று திருவாரூர் எஸ்.பியிடம், என் மீது புகார் கொடுத்திருப்பதாக செய்திகள் மூலம் அறிந்து கொண்டேன்.
இதற்கு தானே காத்திருந்தேன். இதைதானே பத்து நாட்களாக “யாராவது கேஸ் போடுங்கப்பா… கேஸ் போடுங்கப்பா…” என்று கேட்டுக் கொண்டிருந்தேன்.
கிட்னி திருடனிடம் வடிவேலு மாட்டிக் கொள்வதைப் போல கருப்பு (எ) முருகானந்தமும் அகப்பட்டிருக்கிறார்.
“கூடிய சீக்கிரம் புகார் பிரதியை என்னிடம் ப்ரெஞ்ச் போலிஸ் கொடுக்கட்டும். அப்பறம் இருக்குடி…” என்று பேசத்தான் ஆசை. சபை நாகரிகம் இருக்கிறதே. அதனால் ‘வாழ்த்துக்கள் இண்டர் நேஷனல் ரெளவுடி’யாவதற்கு என்பதோடு நிறுத்திக் கொள்கிறேன்” இவ்வாறு தமிழச்சி குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழச்சியிடமும் பேட்டிக்காக தொடர்புகொண்டிருக்கிறோம். அவரது பதில் வந்த பிறகு வெளியிடுவோம்.