
இலங்கையின் வல்வெட்டித்துறை, ஈழ மக்களின் போராட்டத்தில் முக்கிய இடம் வகிக்கும் ஊர்.தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழ விடுதலை இயக்கம் ஆகிய ஈழ இயக்கங்கள் இந்த ஊரில்தான் உருவாகின. வேலுப்பிள்ளை பிரபாகரன், குட்டிமணி ஆகியோர் இங்கு பிறந்த ஊர் இது.
இந்த ஊரிலும் தீபாவளி அன்று, விஜய் நடித்த மெர்சல் ரிலீஸ் ஆகிறது. இதற்காக இந்த ஊர் விஜய் ரசிகர்கள் 15 அடி உயரத்தில் பேனர் வைத்திருக்கிறார்கள்.
ஈழ ஆர்வலர்கள், “வல்வட்டித்துறையிலேயே விஜய் பேனரா.. சினிமா மோகம் ஈழ மக்களை இந்த அளவுக்கு பிடித்து ஆட்டுகிறதே”என்று சமூகவலைதளங்களில் ஆதங்கத்தோடு எழுதி வருகிறார்கள்.
[youtube-feed feed=1]