ஜல்லிக்கட்டு போராட்டத்துக்குச் சென்று பிணமாக கரை ஒதுங்கிய மாணவன்!

Must read

சென்னை மெரின கடற்கரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில்கலந்தகொள்ள சென்ற மாணவன் ஒருவர், பிணமாக கரை  ஒதுங்கிய துயரச் சம்பவம் நடந்துள்ளது.

 

அம்பத்தூர் மேனாம்பேடுவை சேர்ந்த கல்யாணராமன் என்வரின்  மகன் மணிகண்டன்(16) என்பவர்தான் உயிரிழந்த மாணவர். இவர்,. அம்பத்தூர் விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் 11-ம் வகுப்பு படித்துவந்தார்.

கடந்த, 22-ம் தேதி ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொள்ள நண்பர்களுடன் மெரினா கடற்கரைக்கு வந்தார். அப்போது நண்பர்கள் கடல் பகுதிக்கு சென்றுள்ளனர். பிறகு  மணிகண்டனை  காணவில்லை. அவரை நீண்ட நேரம்  தேடிய நண் பர்கள், பிறகு  வீடு திரும்பி விட்டனர். மணிகண்டனை காணாததால்,  அவரது பெற்றோர் நண்பர்களிடம் விசாரித்தனர்.

தகவல் ஏதும் கிடைக்காததால்  23-ம் தேதி அண்ணா சதுக் கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றனர். அன்று மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டம் தலைதூக்கியது.  தடியடி நடத்தப்பட்டது.   ஆகவே அவர்களால் காவல் நிலையம் வரமுடியவில்லை. மறுநாள் 24-ம் தேதி புகார் அளித்தனர் .

இந்த நிலையில், கடற்கரை பகுதியான, கானாத்தூர் அருகே  ஒரு இளைஞனின் உடல் கரை ஒதுங்கியது. அதை காவல்துறையினர் கைப்பற்றி   ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில்  வைத்திருந்தனர். மணிகண்டனின் பெற்றோர்  அதை பார்ர்த்து,  அது மணிகண்டனின் உடல்தான் என அடையாளம் கண்டு கதறி அழுதனர். பிறகு பிரேத பரிசோதனைக்கு  நடந்து,  உடல் அடக்கம் செய்யப்பட்டது.

 

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article