சென்னை

ஜினிகாந்த் முடிவையொட்டி ஜோதிடரும் பாஜக தலைவருமான ஷெல்வி தனது தொழிலைக் கைவிடுவாரா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ரஜினிகாந்த் அரசியல் கட்சி அமைக்கப்போவதாகச் செய்திகள் வந்ததில் இருந்தே பல ஊகங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.  வெகு சிலரைத் தவிர மற்றவர்களில் பலர் அவர் கட்சியைத் தொடங்குவார் எனப் பெரிதும் நம்பி வந்தனர்.  இதற்கு ஒரு சில ஊகங்களும் மிகவும் ஊக்கம் அளித்து வந்தன.

அவ்வகையில் ஜோதிடர் ஷெல்வியின் அறிவிப்பும் ஒன்றாக இருந்தது.  ஷெல்லி தமிழக பாஜகவில் அறிவுசார் பிரிவு தலைவராக உள்ளார்.  இவர் வரும் டிசம்பர் மாதத்துக்குள் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பார் எனவும் அவ்வாறு அவர் கட்சி ஆரம்பிக்கவில்லை எனில் தமது ஜோதிடத் தொழிலைக் கைவிட்டு விடுவதாக அறிவித்திருந்தார்.

நேற்று ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க மாட்டேன் என அறிவித்தது ஷெல்வியின் கணிப்புக்கு எதிராக அமைந்துள்ளது.  இதையொட்டி தமது ஜோதிடத் தொழிலை ஷெல்வி கைவிடுவாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

ஏற்கனவே 2020 ஆம் ஆண்டு அனைவருக்கும் சிறப்பாக இருக்கும் என ஷெல்வி கணித்த போது கொரோனாவால் அனைவரும் முடங்கியதையும் பலர் சுட்டிக் காட்டி வருகின்றனர்.