இந்தியா முழுவதும், 21 நாட்கள் முழுமையான ஊரடங்கிற்கு உத்தரவிட்டதன் மூலம் வலுவான நடவடிக்கையை, பிரதமர் நரேந்திர மோடி, முன்னெடுத்துள்ளார்.இதற்கு இந்தியாவுடன், ஐ.நா., என்றும் துணை நிற்கும்’ என, உலக சுகாதார நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது.
பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிப் போயுள்ளனர்.மக்களின் பொழுதுபோக்காக ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்கள் மாறி வருகின்றன.
இது தொடர்பாக நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி டெட் சாரண்டாஸ் எங்களுடைய நெட்ஃபிளிக்ஸ் அமைப்பு வலுவானது என்பதால் எவ்வளவு பேர் பார்த்தாலும் அதைக் கையாள முடியும். நிறைய பேர் நெட்ஃபிளிக்ஸ் பார்த்து வருகின்றனர்.
எங்கள் வெப் தொடர்களின் அனைத்துப் பகுதிகளையும் நாங்கள் பதிவேற்ற உழைத்துக் கொண்டிருப்பதால் அடுத்த சில மாதங்களுக்கு எந்த இடையூறும் இருக்காது. இப்போது தயாரிப்பு நிறுத்தப்பட்டுள்ளதால் ஒரு வேளை இந்த வருடத்தின் பிற்பகுதியில் (இதே நிலை தொடர்ந்தால்) பிரச்சினையைச் சந்திக்கலாம்” என்று கூறியுள்ளார்.