புதுடெல்லி :

 

மீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய கல்வி கொள்கை (NEP) 2020 நாட்டில் கற்றல் செயல்முறையை மாற்றும், இராணுவத்தின் ஆயுதப் படை பிரிவு சிப்பாயாகக்  கிராமப்புறங்களைச் சேர்ந்த இளைஞர்களை அடையாளம் காண இது உதவும் என்று முப்படைகளின் தலைமைத் தளபதி   பிபின் ராவத் கூறியிருக்கிறார்.

“புதிய கல்விக் கொள்கை கற்றல் செயல்முறையை அனைத்து மட்டங்களிலும் மாற்றும் … இந்த மாற்றம் இராணுவப் படைகளுக்கு கிராமப்புறங்களைச் சேர்ந்த இளைஞர்களை அடையாளம் காண உதவும், இது சிப்பாய்களுக்கான நடைமுறை மற்றும் புதுமையான அணுகுமுறைக்கு ஏற்றதாக இருக்கும்” என்று ஜெனரல் ராவத் கூறினார். புதிய கொள்கையை கொண்டு வந்ததற்காக மத்திய  மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தைப் பாராட்டிய நாட்டின் மூத்த இராணுவ அதிகாரி, “புதுமையான மற்றும் செயல்முறை  கற்றலை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது,  இதன் மூலம் நம்  இளைஞர்கள் வளர்ச்சியடைவதை நாம்  காண்போம், சரியான திறன்கள் அவர்களுக்கு வேலை வாய்ப்புகளைத் தேட உதவும். ”

கல்லூரி மட்டத்தில் பல நிலை உள்நுழைவு  மற்றும் வெளியேறும் திட்டங்கள் நமது இளைஞர்களுக்கு வரவேற்கத்தக்க மாற்றமாக இருக்கும் என்றார். “ஆசிரியர்கள் இந்த மாற்றத்திற்கு தயாராக வேண்டும், முன்னணியில் இருந்து அவர்கள் தான்  வழிநடத்த வேண்டும்,” என்று மேலும் கூறினார்.

NEP 2020 ல் கொண்டுவரப்பட்ட பள்ளி கல்வியின் முக்கிய சீர்திருத்தங்கள், ஆரம்பகால குழந்தை பருவ பராமரிப்பு கல்வியை (ECCE) உலகமயமாக்குதல், அடிப்படை கல்வியறிவு மற்றும் அடிப்படை எண்ணிக்கையில் கவனம் செலுத்துவதற்கான தேசிய நோக்கம், கலை மற்றும் அறிவியல் பிரிவுகளுக்கு இடையே வித்தியாசமின்றி மற்றும் தொழிற்கல்வி மற்றும் வகுப்பறை கல்வி மற்றும் பாடத்திட்ட கல்வி மற்றும் கூடுதல் பாடத்திட்ட கல்வி ஆகியவற்றிக்கு இடையில் இருக்கும் வித்தியாசத்தை நீக்கவும் இந்த சீர்திருத்தங்கள் உதவும் என்று கூறப்படுகிறது.

புதிய கல்விக் கொள்கை நாட்டில் உள்ள நகர்ப்புற மற்றும் வசதிபடைத்த மாணவர்களுக்கு மட்டுமே உதவும் என்று பல்வேறு தரப்பினர் கூறிவரும் நிலையில் முப்படைகளின் தலைமைத் தளபதி இவ்வாறு கூறியிருக்கிறார்.