செல்வராகவன் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டே உருவான திரைப்படம்தான் நெஞ்சம் மறப்பதில்லை. எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார்.
பல சிக்கல்களுக்கு பின் மார்ச் 5ம் தேதியான வெளியான இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
சைக்காலஜிக்கல் த்ரில்லர் கதை என்பதால் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பெரிதளவில் ஈர்த்தது.
இந்நிலையில் இந்த திரைப்படம் இப்போது ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. பிரபல ஓடிடி தளங்களில் ஒன்றான ZEE 5 பிரிமியம் ஓடிடி தளத்தில் மே 14-ஆம் தேதி முதல் இது ஒளிபரப்பாக உள்ளது.