கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு எஸ்.பி.பாலசுப்ரமணியம் எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஒன்றரை மாதத்துக்கு மேலாக அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 24-ஆம் தேதி சிகிச்சை பலனின்றிஅவர் உயிரிழந்தார்.

இந்நிலையில் நெல்லூரை பூர்வீகமாகக் கொண்ட எஸ்.பி.பி.யை கவுரவிக்கும் பொருட்டு நெல்லூரில் உள்ள அரசு இசை மற்றும் நாட்டிய பள்ளி பெயரை டாக்டர் எஸ். பி.பாலசுப்ரமணியம் இசை மற்றும் நாட்டிய பள்ளி என்று பெயர்மாற்றம் செய்ய ஆந்திர மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

[youtube-feed feed=1]