Skip to content
  • Fri. Sep 11th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
இந்தியா சினி பிட்ஸ்

வீடு இடிப்பு: கங்கனா ரனாவத் வழக்கில் உத்தவ்தாக்கரே அரசை காய்ச்சி எடுத்த மும்பை உயர்நீதிமன்றம்….

Nov 27, 2020

மும்பை: வீதி மீறி கட்டியதாக கூறி, நடிகை கங்கனா ரனாவத்தின்  பங்களாவை அவசரம் அவசரமாக இடித்ததற்கு ரூ.2 கோடி இழப்பீடு  வழங்க வேண்டும் என வலியுறுத்தி, நடிகை கங்கனா, மகாராஷ்டிர மாநில   அரசு மீது தொடர்ந்த வழக்கில், மும்பை உயர்நீதிமன்றம், மாநில அரசு மற்றும் மும்பை மாநகராட்சியின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தது.

பாலிவுட் திரையுலகில் நிகழும் போதைப்பொருள்  விவகாரம் தொடர்பாக, நடிகை கங்கனா கருத்து தெரிவித்ததால்,  அவருக்கும், ஆட்சி செய்யும் உத்தவ்தாககரே அரசுக்கும் இடையே  மோதல் ஏற்பட்டது. இதையடுத்து கங்கானா மும்பை வரமுடியாது என  சிவசேனா பகிரங்க மிரட்டல் விடுத்தது. இதையடுத்து, அவர் மத்தியஅரசை நாடிய நிலையில், அவருக்கு மத்தியஅரசு இசட்பிளஸ் பாதுகாப்பு வழங்கியது.  அந்த பாதுகாப்புடன் மும்பை வந்து கவர்னரை சந்தித்து மாநில அரசு மீது புகார் கொடுத்தார்.

இதனால் கடும் கோபமடைந்த தாக்கரே அரசு, மும்பை மாநகராட்சி மூலம் குடைச்சல் கொடுக்கத் தொடங்கியது. மும்பையில் உள்ள கங்கனா ரனாவத்தின் வீட்டில்,  அனுமதியை மீறி படிக்கட்டுக்கு கீழே கழிவறை அமைத்துள்ளதாகவும், வீட்டை அலுவலகமாக மாற்றி இருப்பதாகவும் கூறி நோட்டிஸ் அனுப்பியது. இதை எதிர்த்து கங்கனா கோர்ட்டுக்கு செல்ல, விசாரணை வருவதற்குள் வீட்டின்  ஒருபகுதியை மும்பை மாநகராட்சி நிர்வாகம் இடித்து தள்ளியது.

இதை எதிர்த்து,  கங்கனா, மும்பை உயர்நீதி மன்றத்தில் ரூ.2 கோடி இழப்பீடு  கேட்டு வழக்கு தொடர்ந்தார். அதையடுத்து, கங்கனா வீட்டை இடிக்க நீதிமன்றம் தடை விதித்து. மாநகராட்சியின் நடவடிக்கையையும் கண்டித்தது.

இந்த நிலையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.  விசாரணையைத் தொடர்ந்து, கருத்து தெரிவித்த நீதிபதிகள்,  , மகாராஷ்டிரா மாநில அரசு மற்றும் மும்பை மாநகராட்சியின் நடவடிக்கையாக கடுமையாக விமர்சித்ததுடன்,  கங்கனா ரனாவத்தின் அலுவலகத்தை இடித்திருப்பது மாநில அரசின்  தீய உள்நோக்கத்தை தவிர வேறு எதுவும் இல்லை  காட்டமாக குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் முப்பை மாநகராட்சி சார்பில்,  கங்கனா ரனாவத் விசாரணைக்கு   ஆஜராக அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ததுடன்,  கட்டிடம் இடிக்கப்பட்டதற்கு இழப்பீடு வழங்குவது குறித்து மதிப்பிட அதிகாரி நியமிக்கப்பட வேண்டுமெனவும், அந்த அதிகாரி அளிக்கும் அறிக்கையை ஆய்வு செய்த  பின்னர் எவ்வளவு இழப்பீடு தொகை வழங்கப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும்  தெரிவித்துஉள்ளது.

அதுபோல,  சமூகவலைதளத்தில் பிறரை பற்றி கருத்து பதிவிடுகையில் கட்டுப்பாடுடன் கங்கனா நடக்க வேண்டுமெனவும் உயர்நீதிமன்றம் கேட்டு கொண்டது.

 

Post navigation

இசை மற்றும் நாட்டிய பள்ளிக்கு எஸ்.பி.பி.யின் பெயரைச் சூட்டி கௌரவித்துள்ளது ஆந்திர அரசு….!
சந்தானத்தின் ‘பிஸ்கோத்’ திரைப்படத்தின் வெற்றிமுனை வேல் பிடித்த பாடல் வீடியோ வெளியீடு…..!

Related Post

இந்தியா

டெல்லியில் ஒரு அத்திப்பட்டி… 908 வாக்காளர்கள் மாயம்? சாந்தினி சௌக்கில் பரபரப்பு

இந்தியா

எல்பிஜி சிலிண்டர் விதிகளில் தளர்வு: கிராமப்புற மக்களும் இனி 25 நாட்களுக்கு ஒருமுறை சிலிண்டர் பெறலாம்

இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

உலகம்

உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar
உலகம்

ஹாரி–மேகன் அமெரிக்காவை விட்டு பிரிட்டனுக்குத் திரும்பியதில் மகிழ்ச்சி: டிரம்ப் கருத்து

September 3, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer