நெல்லை: போதுமான அளவில் பயணிகள் வரவேற்பு இல்லாததால், திருநெல்வேலி – தூத்துக்குடி இடையேயான பயணிகள் ரயில் இன்றுமுதல் இயங்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
திருநெல்வேலியிலிருந்து கங்கைகொண்டான், வாஞ்சிமணியாச்சி, தட்டாப்பாரை வழியாக தூத்துக்குடிக்கு தினமும் காலை 7.35 மணிக்கும், மறுமாா்க்கமாக மாலை 6.25 மணிக்கும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலுக்கு பொதுமக்கள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லை. இந்த ரயில் பல ஊர்கள் வழியாக சுற்றி செல்வதால், அதிக நேரம் பிடிப்பதாக பயணிகள் குற்றம் சாட்டி வந்தனர். அதே வேளையில் பேருந்து மூலம் பயணம் செய்தால், தூத்துக்குடி இடையே அதிகபட்சமாக ஒன்றரை மணி நேரத்தில் பயணிக்க முடியும் இதனால், பயணிகள் ரயிலுக்கு போதிய வரவேற்பு இல்லை.
மேலும், தற்போது இயக்கத்தில் உள்ள பாலக்காடு – திருநெல்வேலி இடையே இயக்கப்பட்ட பாலருவி விரைவு ரயில் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால்,
இந்த நிலையில், இந்த ரயில் திங்கள்கிழமை (ஆக.19) முதல் முற்றிலும் ரத்து செய்யப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயிலில் மிகக் குறைந்த அளவே பயணிகள் பயணிப்பதால் தூத்துக்குடி – திருநெல்வேலி இடையே இயக்கப்பட்ட பயணிகள் ரயில் சேவையை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் ரயில்வே தெரிவித்துள்ளது.
முன்னதாக, தூத்துக்குடி – திருநெல்வேலி இடையே இயக்கப்பட்ட பயணிகள் ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை தோறும் இயக்கப்படாது என ரயில்வே நிா்வாகம் முதலில் அறிவித்திருந்தது. தற்போது முழுமையாக ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.