நெல்லை:
பேரனின் பொறுப்பில் திருநெல்வேலி இருட்டு கடை அல்வா மீண்டும் தொடங்கப்பட்டது.

நெல்லை நெல்லையப்பர் கோயில் கீழ ரத வீதியில் புகழ்பெற்ற இருட்டு கடை அல்வா 100 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வருகிறது. இந்த அல்வா கடை தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநில மக்களின் பிரசித்தி பெற்றதாக இருந்து வருகிறது. கடையின் உரிமையாளர் ஹரிசிங்கின் பூர்விகம் ராஜஸ்தான் மாநிலம் ஆகும். இதனிடையே, அல்வா கடையின் உரிமையாளர் ஹரிசிங் கடந்த 25 ஆம் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அன்றிலிருந்து கடை மூடப்பட்டது.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஹரிசிங் மன அழுத்ததால் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் உலக புகழ்பெற்ற திருநெல்வேலி இருட்டு கடை அல்வா இன்று முதல் மீண்டும் செயல்பட துவங்கியது. மறைந்த ஹரி சிங்கின் பேரன் சூரத்சிங் கடை நிர்வாக்கத்தை ஏற்றுள்ளார்.