புதுடெல்லி:
மோடி ஆட்சியில் மாநில எல்லைகளும் பாதுகாப்பாக இல்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

அசாமில் ஆட்சிக்கு வந்தால் எல்லை பிரச்சனையை தீர்த்து வைப்பதாக பா.ஜ.க வாக்குறுதி அளித்தது. ஆனால், வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், இருமாநில போலிஸார் எல்லை பிரச்சனையில் மோதியதில் உயிரிழப்பு நிகழந்துள்ளது. பா.ஜ.கவால் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியவில்லை.

மேலும் இருமாநில அரசுகளும் பிரச்சனையை வளர்த்துக்கொள்ளும் போக்கையும் விடுவதாக இல்லை. அதேபோல், திரிபுரா மற்றும் மணிப்பூரை தவிர பிற வடகிழக்கு மாநிலங்கள் அனைத்தும் அசாமுடன் நீண்ட காலமாக எல்லை பிரச்சினையில் நீடிக்கின்றன.

பிரதமர் மோடி தலைமையிலான தற்போதைய மத்திய பா.ஜ.க. அரசின் ஆட்சியில், தேசிய எல்லை மட்டுமல்ல மாநில எல்லைகளும் பாதுகாப்பாக இல்லை என்று குற்றம் சாட்டினார்.