டெல்லி: இந்தியாவின் முதல் பிரதமரான மறைந்த ஜவஹர்லால் நேரு பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் எம்.பி. சோனியா காந்தி மலர்தூவி மரியாதை செய்தார். தொடர்ந்து காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் நேருவின் நினைவிடத்தில் மரியாதை செய்தார்.

இந்தியாவின் முதல் பிரதமர் மறைந்த ஜவகர்லால் நேருவின் 136வரது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் டெல்லியில் உள்ள நேருவின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு முக்கிய தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், , நேருவின் நினைவிடத்தில் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மலர்களை தூவி மரியாதை செலுத்தினார். மேலும், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் நேருவின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அவர்களுடன், மாநிலங்களவை துணை தலைவர் கிரண் ரிஜ்ஜூ, கே.சி.வேணுகோபால் உள்பட பலர் நேருவின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினர்.

நவீன இந்தியாவின் கட்டிடக் கலைஞர், பண்டிட். நேரு, நமது குடியரசின் அஸ்திவாரங்களை வலுவான ஜனநாயக நிறுவனங்களின் தூண்கள் மற்றும் நமது தொழில்துறை, அறிவியல் மற்றும் கல்வி முன்னேற்றத்தைத் தூண்டிய உலகத் தரம் வாய்ந்த ‘நவீன இந்தியாவின் சிற்பி என்றும், அதிநவீன நிறுவனங்கள், புதுமையான கொள்கைகள் மற்றும் ஜனநாயகம் மற்றும் அறிவியல் மனப்பான்மையின் மீது தீவிர நம்பிக்கை கொண்டு, உலக அரங்கில் இந்தியாவை முன்னேற்றத்தை நோக்கி அழைத்துச் சென்றார். பிரகாசமாக பிரகாசிக்கும் அவரது ஒப்பற்ற மரபுக்கு அஞ்சலி,
அவரது உன்னத மரபு நம்மை தொடர்ந்து வழிநடத்துகிறது.என காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.