1979-ம் ஆண்டு வெளியான கமல், ஶ்ரீதேவி நடித்த ‘நீயா’ படத்தின் இரண்டாம் பாகம் ‘நீயா 2’ இயக்குநர் சுரேஷ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ஜெய், லட்சுமி ராய், கேத்ரின் தெரசா மற்றும் வரலட்சுமி நடித்துள்ளனர்.
முதல் பாகத்தில் இடம்பெற்ற ‘ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்’ பாடல் இரண்டாம் பாகத்திலும் ரீமேக் ஆக்கப்பட்டுள்ளது. இன்று இந்தப் பாடல் வரிகள் வீடியோ, இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
சபிர் இந்தப் படத்துக்கும் இசையமைத்திருக்கிறார். சென்சார் போர்ட் படத்துக்கு ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளது.