டில்லி:
மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வு முடிவு இன்று காலை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாலை 4 மணிக்கு வெளியாகும் என தேசிய கல்வி வாரிய தலைவர் வினித் ஜோஷி தெரிவித்து உள்ளார்.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர மாணவர்களுக்கு நீட் தேர்வு மே 5ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது.
இந்த தேர்வுக்கான கடந்த மே 29 ஆம் தேதி விடைக்குறிப்பு வெளியானது. இந்த விடைக்குறிப்பில் ஆட்சேபனைகள் எதேனும் இருந்தால் அதை 29ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆட்சேபனைகள் பரிசீலிக்கப்பட்டு இறுதி விடைக்குறிப்பு www.ntaneet.nic.in என்ற இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இன்று மாலை நீட் தேர்வுக்கான முடிவுகள் வெளியாக உள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.