சென்னை:  அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு, நீட் தேர்வுக்கு ஒருமுறை மட்டுமே பயிற்சி வழங்கப்படும் என தெரிவித்துள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்,  தற்போது பள்ளிகள் திறப்பு சம்பந்தமாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமார், பள்ளிக்கல்வி ஆணையர் வெங்கடேஷ், பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குனர் பழனிசாமி உள்பட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,  அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அளிக்கப்படும் நீட் தோ்வுக்கான இலவசப் பயிற்சி, ஒரு முறை தோ்வு எழுதுவதற்கு மட்டுமே அளிக்கப்படும், நீட் தோ்வு எழுதும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இபாக்ஸ் என்ற நிறுவனம் மூலம் இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது.  இந்த இலவசப் பயிற்சி ஒரு மாணவருக்கு ஒருமுறை மட்டுமே அளிக்கப்படும். இந்த தோ்வை இரண்டாவது முறையாக எழுதும் மாணவா்கள் தனியாா் பயிற்சி மையங்கள் மூலம் பயிற்சி பெற்றுதான் தோ்வு எழுத வேண்டும் என்றாா்.

மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுபட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுதோறும் அரசுப் பள்ளியில் படிக்கும் 300க்கும் மேற்பட்ட மாணவா்கள் மருத்துவம் படிக்க வாய்ப்புள்ளது.

பள்ளிகளைத் தற்போது திறப்பதற்கு சாத்தியக்கூறு இல்லை என்றாலும், பள்ளிகள் எப்போது திறக்க வாய்ப்பு உள்ளது என்பது  தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.