டில்லி,
இந்த ஆண்டு நடைபெற மருத்துவ நுழைவு தேர்வான நீட் நுழைவு தேர்வில் நாடு முழுவதும ஒர வினாத்தாள் தான் தயாரிக்கப்படும் சிபிஎஸ்இ கல்வி வாரியம் சுப்ரீம் கோர்ட்டில் பிரம்மான பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
கடந்த ஆண்டு நாடு முழுவதும் சிபிஎஸ்இ கல்வி வாரியம் நடத்திய நீட் தேர்வின்போது, மாநிலத்துக்கு மாநிலம் வினாத்தாள் மாறுபட்டிருந்தது. இதன் காரணமாக சர்ச்சை எழும்பியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில் சிபிஎஸ்இ கல்வி வாரியம் சார்பில் இன்று பிரம்மான பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், இந்த ஆண்டு முதல் “நீட்” தேர்வு வினாத்தாள் அனைத்து மாநில மொழிகளிலும் ஒரே மாதிரியாக இருக்கும் என கூறி உள்ளது.
மேலும், தமிழ், மராத்தி உள்பட மாநில மொழிகளிலும் கேள்வித்தாள், மொழி பெயர்க்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றும்,
நீட் தேர்வு வினாத்தாளில் ஆங்கிலம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் 180 கேள்விகள் மட்டுமே இடம்பெறும் எனவும் சுப்ரீம் கோர்ட்டில் சிபிஎஸ்இ தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.