டெல்லி: தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு-முதுகலை (NEET PG) மற்றும் பல் அறுவை சிகிச்சை மாஸ்டர் (NEET MDS) ஆகியவற்றிற்கான கவுன்சிலிங் தேதிகளை எம்சிசி (Medical Counselling Committee (MCC) இன்று அறிவித்துள்ளது. கவுன்சிலிங்கிற்கான முதல் பதிவுகள் செப்டம்பர் 1, 2022 முதல் தொடங்கும்.
அதன்படி, அதற்கான பதிவுகள் இன்று mcc.nic.in என்ற இணையதளத்தில் தொடங்கி உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் mcc.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று அட்டவணையைப் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில், இந்த ஆண்டு, 50 சதவீத அகில இந்திய ஒதுக்கீடு (AIQ) இடங்கள், 100 சதவீத டீம்ட், மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் AFMS (MD/ MS/ Diploma/ PG DNB) இடங்களுக்கான சேர்க்கைக்கான நீட் பிஜி கவுன்சிலிங் நடைபெறுகிறது.
நீட் பிஜி 2022 கவுன்சிலிங் மூலம் மொத்தம் 26,168 டாக்டர் ஆஃப் மெடிசின் (எம்டி), 13,649 மாஸ்டர் ஆஃப் சர்ஜரி (எம்எஸ்), 922 பிஜி டிப்ளமோ மற்றும் 1,388 டிஎன்பி சிஇடி இடங்கள் வழங்கப்படும்.
எம்டி : 26,168 இடங்கள்
எம்எஸ் : 13,649 இடங்கள்
பிஜி டிப்ளமோ : 922 இடங்கள்
டிஎன்பி சிஇடி : 1,388 இடங்கள்
நீட் பிஜி, 2022 கவுன்சிலிங் அட்டவணை
நீட் பிஜி கவுன்சிலிங் 2022 சுற்று 1
செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 4 வரை – பதிவு மற்றும் கட்டணம் செலுத்துதல்
செப்டம்பர் 2 முதல் செப்டம்பர் 5 வரை – விருப்பமான படிப்பு மற்றும் கல்லூரியை தேர்வு செய்தல்
செப்டம்பர் 5 – அந்தந்த பல்கலைக்கழகங்கள்/கல்லூரிகளால் உள் விண்ணப்பதாரர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு
செப்டம்பர் 6 முதல் செப்டம்பர் 7 வரை – இருக்கை ஒதுக்கீடு செயல்முறை
செப்டம்பர் 8 – முடிவு வெளியிடுதல்
செப்டம்பர் 9 முதல் செப்டம்பர் 13, 2022 வரை – ஒதுக்கப்பட்ட நிறுவனத்தில் சேர்தல்
நீட் பிஜி கவுன்சிலிங் 2022 சுற்று 2
செப்டம்பர் 19 முதல் செப்டம்பர் 21 வரை – பதிவு மற்றும் கட்டணம் செலுத்துதல்
செப்டம்பர் 19 முதல் செப்டம்பர் 22 வரை – விருப்பமான படிப்பு மற்றும் கல்லூரியை தேர்வு செய்தல்
செப்டம்பர் 22 – அந்தந்த பல்கலைக்கழகங்கள்/கல்லூரிகளால் உள் விண்ணப்பதாரர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு
செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 24 வரை – இருக்கை ஒதுக்கீடு செயல்முறை
செப்டம்பர் 25 – முடிவு வெளியிடுதல்
செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 1 வரை – ஒதுக்கப்பட்ட நிறுவனத்தில் சேர்தல்
நீட் பிஜி கவுன்சிலிங் மாப்-அப் சுற்று
அக்டோபர் 6 முதல் அக்டோபர் 9 வரை – பதிவு மற்றும் கட்டணம் செலுத்துதல்
அக்டோபர் 7 முதல் அக்டோபர் 10 வரை – விருப்பமான படிப்பு மற்றும் கல்லூரியை தேர்வு செய்தல்
அக்டோபர் 10 – அந்தந்த பல்கலைக்கழகங்கள்/கல்லூரிகளால் உள் விண்ணப்பதாரர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு
அக்டோபர் 11 முதல் அக்டோபர் 12 வரை – இருக்கை ஒதுக்கீடு செயல்முறை
அக்டோபர் 13 – முடிவு வெளியிடுதல்
அக்டோபர் 14 முதல் அக்டோபர் 18 வரை – ஒதுக்கப்பட்ட நிறுவனத்தில் சேர்தல்
நீட் பிஜி கவுன்சிலிங் சிறப்பு ஸ்ட்ரே சுற்று
அக்டோபர் 20 முதல் அக்டோபர் 21 வரை – இருக்கை ஒதுக்கீடு செயல்முறை
அக்டோபர் 22 – முடிவு வெளியிடுதல்
அக்டோபர் 23 முதல் அக்டோபர் 31, 2022 வரை – ஒதுக்கப்பட்ட நிறுவனத்தில் சேர்தல்