தேனி:

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்கள் பிரவீன், ராகுல் உள்பட 4 பேர் மற்றும் அவர்களது தந்தையின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும்  21ந்தேதிக்கு தள்ளி வைப்பு நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.

தமிழகத்தில் நீட் மாறாட்டம் தொடர்பாக சென்னை மாணவர் உதித்சூர்யா உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஏற்கனவே உதித்சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ள நிலையில், சிறையில் உள்ள  பிரவீன், ராகுல், இர்பான்  உள்பட 4 பேர் தாக்கல் செய்துள்ள ஜாமின் மனு மீதான விசாரணைக்கு வருவதாக இருந்தது.

ஆனால்,  மாவட்ட அமர்வு நீதிபதி சீனிவாசன் விடுப்பில் சென்றதால் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.