சென்னை:

மே 5ந்தேதி மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வான  நீட் நுழைவு தேர்வு நடைபெற உள்ள நிலையில், ஹால் டிக்கெட்டில்  உள்ள குளறுபடிகளை சரி செய்ய மே 3ந்தேதி கடைசி நாள் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது.

இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்ட நிலையில், ஹால் டிக்கெட்டில் உள்ள பிழைகள் சரி செய்ய அவகாசம் வழங்கப்பட்டது. இந்த நிலையில், வரும் 3ந்தேதிக்குள் ஹால் டிக்கெட்டில் உள்ள குளறுபடிகளை சரிசெய்யும் படி வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் மே 5ம் தேதி மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில், ஹால்டிக்கெட் தொடர்பாக எழுந்த குளறுபடிகள் குறித்து  பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

அதில்,  தமிழகத்தில் இன்னும் பெரும்பாலான மாணவர்கள் தங்களின் ஹால் டிக்கெட்டுகளை  பதிவிறக்கம் செய்யவில்லை என்றும் இதுவரை பதிவிறக்கம் செய்யாத மாணவர்கள் உடனடியாக தங்கள் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

மேலும்,  ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வு மையத்தின் Code மற்றும் தேர்வு மையத்தின் முகவரி சரியாக உள்ளதா என்பதை மாணவர்கள் ஒருமுறை நேரில் சென்று சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அதில் குழப்பம் இருந்தால் உடனடியாக மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தை அணுக வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 3ம் தேதிக்குள் ஹால்டிக்கெட்களில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அதனை சரி செய்து கொள்ள வேண்டும் என்று  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் தேர்வுக்கு ஒரு நாள் முன்பு தேர்வு மையத்துக்கு நேரில் சென்று ஒரு முறை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.