சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு தீர்மானம் எதிர்க்கட்சியான அதிமுக இன்றி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தமிழக சட்டசபையில் இன்று நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்து உரையாற்றினார். அப்போது, வு ஒழிப்புக்கான அனைத்து நடவடிக்கையையும் தமிழக அரசு எடுக்கும் என்று முதலமைச்ச்ர மு.க.ஸ்டாலின் கூறினார் அதைத்தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் அந்த தீர்மானத்தின்மீது தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். இதன்பிறகு தீர்மானத்தின்மீது ஒட்டெடுப்பு நடத்தப்பட்டு, தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சபாநாயகர் அப்பாவு நீட் விலக்கு மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றினார். எதிர்க்கட்சியான அதிமுக இந்த கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க முடியாதபடி சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சியின்றி தீர்மானம் சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேறியது.
நீட் தேர்வு முறைகேடு: தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தனி தீர்மானம் தாக்கல்…