டில்லி,

நாடு முழுவதும் மருத்துவக்கல்விக்கான நீட் எழுத்து தேர்வு நேற்று கடந்த ஞாயிற்றுக்கிழமை (7ந்தேதி) நடைபெற்றது.

இந்த தேர்வு  நாடு முழுவதும் உள்ள 103 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள 2 ஆயிரத்து 204 தேர்வு மையங்களில் நடைபெற்றது.

நீட் தேர்வுக்கு எழுத வரும் மாணவ மாணவிகளின் உடைகள் குறித்து கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும் முழுக்கை சட்டை அணிந்து வந்திருந்த பெண்களின் சட்டையின் கை பகுதிகளிள் வெட்டி எடுக்கப்பட்டன.

மேலும் கேரள மாநிலத்தில் கண்ணூர் பகுதியில்  நீட் தேர்வு எழுத சென்ற மாணவியின் உள்ளாடையை சோதனைக்காக கழற்றச் சொன்ன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

மாணவியரின் பெற்றோர் பலர் காவல்துறையில் புகார்கள் அளித்துள்ள நிலையில், கேரள மாநில மனித உரிமைகள் ஆணையம் இது குறித்துத் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.

ஆடைக் கட்டுப்பாடு என்ற பெயரில் நடந்த அத்துமீறல்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து மூன்று வாரங்களுக்குள் விளக்கமளிக்குமாறு சிபிஎஸ்இ தென்மண்டல இயக்குநருக்கு மனித உரிமைகள் ஆணையம், மாநில மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனும்,  ஆடைக் கட்டுப்பாடு என்கிற பெயரில் நடந்துள்ள அத்துமீறல்களை எந்த நாகரிகமான சமுதாயமும் ஏற்றுக்கொள்ளாது என கடுமையாக விமர்சித்திருந்தார்.

சிபிஎஸ்யி-ன் அதிகார அத்துமீறல்கள் குறித்து தமிழ்நாட்டில் வழக்கும் பதிவு செய்துள்ளது.

சிபிஎஸ்யின் அநாகரிக செயல்குறித்து நாடு முழுவதும் கடும் எதிப்பு கிளம்பியதை தொடர்ந்து, அநாகரிக சோதனையில் ஈடுபட்ட 4 ஆசிரியைகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மாணவிகளிடம் நடைபெற்ற அநாகரிக சோதனை குறித்து சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது.

அதில், கண்ணூரில் நீட் தேர்வின்போது நடத்த சம்பவமானது துரதிருஷ்டவசமானது. தேர்வின் போது கண்காணிப்பு பணியில் இருந்த யாரோ சிலரது தனிப்பட்ட ஆர்வமிகுதியின் காரணமாக ஏற்பட்ட விளைவுதான் இதுவாகும்.

இருப்பினும், தேர்வு எழுத வந்த மாணவர்களுக்கு தவறுதலாக ஏற்பட்ட சிரமத்திற்கு வாரியம் வருந்துகிறது.

தேர்வுகளுக்கு நுழைவதற்கு முன்னர் எடுக்கப்படும் கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்து இணையதளங்கள், தகவல் அறிவிப்புக்கள், அச்சிடப்பட்ட அறிவுறுத்தல்கள் மற்றும் தனிப்பட்ட முறையில் மின்னஞ்சல்கள், எஸ்எம்எஸ் மூலம் தேர்வு எழுத வருபவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது,” என சிபிஎஸ்இ விளக்கம் அளித்து உள்ளது.

மேலும்,  இதில் கடந்தாண்டு பின்பற்றப்பட்ட விதிமுறைகள் தான் இந்தாண்டும் பின்பற்றப்பட்டது என்றும், 2015ம் ஆண்டு நடைபெற்ற  ஏஐபிஎம்டி தேர்வில் சிலர் முறைகேட்டில் ஈடுபட்டதை அடுத்து புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டது என்றுமம்,

தங்களின் கட்டுபாடுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது என்றும்  சிபிஎஸ்இ கல்வி வாரியம் விளக்கம் அளித்துள்ளது.