சென்னை: நீட் தேர்வு முடிவுகள் முறைகேடு தொடர்பாக நாடு முழுவதும் வரும் 21-ந்தேதி போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு முடிவுகள் கடந்த 6ந்தேதி வெளியான நிலையில், அதில் பலர் முதலிடத்தை பிடித்தது விமர்சனங்களுக் கானது. மேலும் தேர்வர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்ணும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக, அனைத்து மாநில தலைநகரங்களிலும் போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சியினருக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக வரும் 21-ந்தேதி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
நீட் தேர்வில் நடைபெற்றுள்ள ஊழல் முறைகேடுகள், தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் தொடர் மௌனத்தை கண்டித்து நீதி கேட்டு போராட்டம் நடைபெறுகிறது. போராட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.