சென்னை: மத்தியஅரசு நீட் தேர்வை கட்டாயமாக்கப்பட்ட பிறகு, தமிழ்நாட்டில்,. முதல்தலைமுறை மாணவர்களின் மருத்துகனவு பாதியாக குறைந்துள்ளது என ஏ.கே.ராஜன் ஆய்வில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றதும், நீட் தாக்கம் குறித்து ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட சிறப்பு குழு அமைத்து ஆய்வு செய்ய உத்தரவிட்டார். இதையத்தொடர்ந்து, அந்த குழுவினர் பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்களிடன் கருத்துக்களை கேட்டும், இதுவரை நடைபெற்றுள்ள நீட் தேர்வுகள், அதன்மூலம் தமிழகத்தில் எத்தனை மாணவர்கள் மருத்துவப்படிப்புக்கு சென்றுள்ளனர் என்பது குறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த குழுவினரிடம் சுமார் 80 ஆயிரம் பேர் தங்களின் கருத்துகளை பதிவு செய்து இருப்பதாகவும், அதை ஆய்வு செய்து, அரசிடம் அறிக்கை அளிப்பதாகவும் நீதிபதி ஏ.கே.ராஜன் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் நீட் தேர்வு அறிமுகப்படுத்திய பிறகு மருத்துவ படிப்பில் சேரும் முதல் தலைமுறை மாணவர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளதாக ஏ.ேக.ராஜன் குழுவின் ஆய்வில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நீட் தேர்லவு அமல்படுத்தபடுவதற்கு முன்பாக மருத்துவ படிப்பில் சேர்ந்த மொத்த மாணவர்களில் சராசரியாக 30 சதவீதம் பேர் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களாக இருந்தனர். ஆனால் நீட் தேர்வு அமல்படுத்தப்பட்ட பின்பு இந்த எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு முதல் நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் இந்த 4 ஆண்டுகளில் மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்களில் 18 சதவீதம் பேர் மட்டுமே முதல் தலைமுறை மாணவர்கள் என்று கண்டறியப்பட்டு உள்ளது.
இதுதொடர்பான அறிக்கையை தயார் செய்யும் பணியில் ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆய்வு அறிக்கை இந்த மாத இறுதிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.