சென்னை: கடும் கட்டுப்பாடுகளுடன் நாடு முழுவதும் நீட் தேர்வு தொடங்கி உள்ளது. பலத்த சோதனைகளுக்கு பின்னரே மாணவர்கள் தேர்வு அறைகளுக்கு அனுமதிக்கப்பட்டனர்.

கொரோனா தொற்று காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட நீட் தேர்வு இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கி உள்ளது. தேர்வு மையங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுவதால் மாணவர்கள் காலை 11 மணி முதல் தேர்வு மையங்களுக்கு வர ஆரம்பித்தனர்.
முழுமையான உடல் வெப்ப சோதனைக்கு பிறகு அவர் அனுமதிக்கப்பட்டனர். நாடு முழுவதும் 154 மையங்களில் 3842 மையங்களில் இந்த தேர்வு தொடங்கி உள்ளன. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல பகுதிகளில் அமைக்கப்பட்ட மையங்களில் தேர்வுகள் தொடங்கி உள்ளன. மாலை 5 மணிக்கு தேர்வு நிறைவு பெறுகிறது.
Patrikai.com official YouTube Channel