புவனேஸ்வர்:
ஃபானி புயல் பாதிப்பு காரணமாக ஒடிசா மாநிலத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், வரும் 20 ம் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் மே 6ந்தேதி (நேற்று) மருத்துவப் படிப்புக்கான நுழைவு தேர்வான நீட் தேர்வு நடைபெற்றது. சுமார் 15 லட்சம் மாணவ மாணவிகள் பங்கேற்று நீட் தேர்வை எழுதினார்.
ஆனால், ஒடிசா மாநிலத்தின் பல மாவட்டங்கள் ஃபானி புயலால் கடுமையான பாதிப்புகளை சந்தித்த நிலையில், அந்த மாநிலத்துக்கு மட்டும் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
இதையடுத்து ஒடிசாவில் நீட் தேர்வானது வருகிற மே 20ம் தேதி நடைபெறும் என்றும், தேர்வானது, காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை நடைபெறும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.