புதுடெல்லி:
டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா கடந்த இரண்டு நாட்களாக கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார்.

இதனால், ஹரியானா அரசு வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்த பாராட்டு விழாவில் கூட அவர் கலந்து கொள்ளவில்லை. மருத்துவரின் ஆலோசனையைப்படி அவருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. சோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளது. நேற்று வரை அவருக்கு 103 டிகிரி அளவு காய்ச்சல் இருந்ததாகவும், இன்று அவர் நலமாக இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
இன்று மாலை ராஷ்டிரபதி பவனில் நடக்க உள்ள விழாவில் நீரஜ் சோப்ரா பங்கேற்பார் என்றும், அவர் நேரடியாக அங்கு வருவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பங்கேற்கும் மற்ற வீரர்கள், தற்போது அசோகா ஹோட்டலில் தங்கியுள்ளனர்.
[youtube-feed feed=1]