டெல்லி: நீதி வேண்டும் என்று கூறி, டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழகம் முன்பு மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் வெடித்துள்ளன. மாணவர்கள் அமைப்பினர் இந்த போராட்டங்களை முன் எடுத்து சென்றுள்ளனர்.
டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழகம் முன்பு திரண்ட மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் குதித்துள்ளனர். பல்கலைக்கழக வாயிலில் திரண்ட அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
இந்து, முஸ்லிம், சீக்கியர்கள் என எந்த மதம் என்றாலும் சகோதர, சகோதரிகளே என்று அவர்கள் கோஷமிட்டனர். தேசிய மக்கள் பதிவேடு, குடியுரிமை சட்டம் இரண்டும் அரசியலமைப்புக்கு எதிரானது என்று மாணவர்கள் தரப்பினர் பேசினர்.
நீதி வேண்டும், அது கிடைக்கும் வரை போராட்டம் ஓயாது என்று மாணவர்கள் உறுதிபட தெரிவித்தனர். தலைநகர் டெல்லியில் மாணவர்களின் தொடர் போராட்டம் காரணமாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.