இளைஞர்களின் எதிர்காலத்தை அழித்த மோடி, அமித்ஷா: ராகுல் காந்தி டுவீட்

Must read

டெல்லி: பிரதமர் மோடியும், அமித் ஷாவும் இளைஞர்களின் எதிர்காலத்தை முற்றிலுமாக அழித்து விட்டனர்  என்று ராகுல் குற்றம்சாட்டி இருக்கிறார்.

இது குறித்து டுவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: அன்பான இந்திய இளைஞர்களே! மோடியும் அமித் ஷாவும் உங்கள் எதிர்காலத்தை அழித்து விட்டனர்.

வேலைவாய்ப்பின்மை, பொருளாதார பாதிப்புகளால் உங்களது கோபத்தை அவர்களால் எதிர்கொள்ள இயலவில்லை. அதனால்தான், நமது அன்புக்குரிய நாட்டை பிரிக்கின்றனர்.

அவர்கள் வெறுப்புணர்வுக்கு பின்னால் ஒளிந்துக் கொள்கின்றனர். ஒவ்வொரு இந்தியரிடமும் அன்பு காட்டுவதன் மூலமாக மட்டுமே அவர்களை நம்மால் வீழ்த்த முடியும் என்று கூறியுள்ளார்.

 

More articles

Latest article