பிரேம்சாகர்  – பரம்ஜித்சிங்

லக்னோ,

பாகிஸ்தான் ராணுவத்தினரால் கொடூரமாக கொல்லப்பட்ட இந்திய ராணுவ வீரர்களின் உடல்கள் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

உ.பி. வந்தடைந்த ராணுவ வீரர் பிரேம்சாகரின் மகள், தனது தந்தையின் தலைக்கு பதிலாக 50 ராணுவ வீரர்களின் தலைகள் வேண்டும் என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

ஜம்மு – காஷ்மீரில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையை சேர்ந்த இருவர் பலியாகினர்.

இந்த வீரர்களின் உடல்களை, பாகிஸ்தானுவத்தினர் சிதைத்து, தலையை துண்டித்திருந்தனர். இதன் அறிந்த இந்திய வீரர்கள் கடும் கோபத்துக்கு ஆளானார்கள். இதன் காரணமாக எல்லை பகுதியில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

பாகிஸ்தான் ராணுவத்தினரால் கொல்லப்பட்ட வீரர்களில் ஒருவர் பஞ்சாபை சேர்ந்தவர். அவரது பெயர் பரம்ஜித் சிங். மற்றொருவர் உ.பி. மாநிலத்தை சேர்ந்த பிரேம்சாகர்.

பிரேம்சாகரின் உடல் இன்று அவரது சொந்த ஊரான உ.பி.,யின் தியோரியா பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.  அவரது உடலை பார்த்த,  பிரேம் சாகரின் மகள் , ‘தனது தந்தையின் தியாகத்திற்கு 50 பாகிஸ்தான் வீரர்களின் உடல்கள் துண்டிக்கப்பட வேண்டும்’ என்று ஆவேசமாக கூறினார்.

இதுபோல் பரம்ஜித் சிங் மகள் சிம்ரந்தீப் கூறுகையில், எனது தந்தை நாட்டுக்காக உயிர் தியாகம் செய்துள்ளார். இதற்காக நான் பெருமைப்படுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

[youtube-feed feed=1]