கோவை,

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாணவி வளர்மதி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

மாணவி வளர்மதி மீது சுமத்தப்பட்டிருந்த குண்டர் சட்டத்தை ரத்து சென்னை ஐகோர்ட்டு நேற்று அதிரடி உத்தரவிட்டதை தொடர்ந்து நெடுவாசல் போராட்ட மாணவி வளர்மதி ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.

விடுதலையான வளர்மதி, உடனே நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் குதித்தார்.

‘புதுக்கோட்டை மாவட்டம், கதிராமங்கலத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தைச் செயல்படுத்தக் கூடாது’ என பொதுமக்களின் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதையடுத்து புதுக்கோட்டை யில் நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்ள வருமாறு ஜூலை 12-ம் தேதியன்று சேலம் பல்கலைக்கழக மாணவி வளர்மதி, சேலம் அரசு மகளிர் கல்லூரி மாணவிகளிடம் துண்டு பிரசுரம் விநியோகித்தார்.

இதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர்மீது காவல்துறை குண்டாஸ் சட்டத்தை பாய்ச்சியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வளர்மதியின் தந்தை மாதையன், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வுமனுவைத் தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து மாணவி வளர்மதி மீது சுமத்தப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து மாணவி வளர்மதி இன்று ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.

சிறையில் இருந்து வெளியான மாணவி வளர்மதிக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.