அரியானாவில் ஆட்சியை கைப்பற்றுகிறது காங்கிரஸ்? எக்சிட் போல் தரும் தகவல்கள்

Must read

சண்டிகர்:

ரியானா மாநிலத்தில் கடந்த 21ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில், பல ஊடகங்கள் அங்கு நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அங்கு, காங்கிரஸ் கட்சியும், பாரதிய ஜனதா கட்சியும் குறைந்த அளவிலான வித்தியாசத்திலேயே வெற்றி பெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இரு கட்சிகளும் நெக் டூ நெக் அளவிலேயே வெற்றிகளை பெறும் என்று எக்சிட் போல் முடிவுகள் தெரிவிக்கின் றன.

90 சட்டசபை தொகுதிகளை கொண்ட அரியானா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடத்தி வருகிறது. இங்கு பாஜக, காங்கிரஸ், இந்திய தேசிய லோக் தள், ஜனநாயக் ஜனதா கட்சி, ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட கட்சிகள் களமிறங்கியிருப்பதால், பலமுனை போட்டி உருவாகியிருக்கிறது. இருந்தாலும்,  பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே நேரடி போட்டி நிலவியது. இந்த தேர்தலில் 1169 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கடந்த 21ந்தேதி அங்கு வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்தது. நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இதற்கிடையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. தொடக்கத்தில் வெளியான கருத்துக்கணிப்புகள், பாஜகதான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்து வந்தன. ஆனால் தற்போது வெளியான கருத்துக்கணிப்பில் இரு கட்சிகளுக்கும் இடையே நெக் டூ நெக் போட்டி நிலவுவதாக தெரிவித்து உள்ளன.

டைம்ஸ் நவ் நடத்திய எக்சிட் போல் முடிவில்,  பாஜக கூட்டணி 71 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கிறது.  11 இடங்களில் மட்டும் காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெறும். 8 இடங்களில் மற்ற பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகள் வெற்றிபெறும். இதன் மூலம் மீண்டும் 2014 போலவே பாஜக பெரும்பான்மை பெறும் என்று தெரிவித்து உள்ளது.

அதேவேளையில் இந்தியா டூடே ஆக்சிஸ் மை இந்தியா ஊடகங்கள் இணைந்து  நடத்தி உள்ள எக்சிட் போல் கருத்துக்கணிப்பில், இரு கட்சிகளுக்கும் இடையே நெக் டூ நெக் போட்டி நிலவுவதாக தெரிவித்து உள்ளது.

அங்கு பாரதிய ஜனதா கட்சி 32 முதல் 44 இடங்களை கைப்பற்றும் என்றும், காங்கிரஸ் கட்சியும் 30 முதல் 42 இடங்களை கைப்பற்றும் எனறும் தெரிவித்து உள்ளது. இதனடன் ஜேஜேடி (ஜனநாயக் ஜனதா தள் கட்சி)  கட்சி 6 முதல் 10 இடங்களை கைப்பற்றும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக ஜேஜேடி கட்சி ஆதரவு அளிக்கும் கட்சியே ஆட்சி அமைக்கும் நிலை உருவாகும் என்று தெரிகிறது. இந்தகட்சி காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் அரியானா மாநிலத்தை காங்கிரஸ் கைப்பற்றும் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

More articles

Latest article