சென்னை: தமிழ்நாட்டில் பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருவது தொடர்பாக சென்னை மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் குழுவினர் நடத்திய ஆய்வில், மாநில தலைநகர் சென்னையில் படிக்கும் பள்ளி மாணவிகளில் 10-ல் ஒருவர் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுகிறார் என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. அதுபோல அதுபோல சைல்டு நெட் தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில், டீன் ஏஜ் பெண்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கினர் தங்கள் வயதுடைய குழந்தைகளால் ஆன்லைனில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை பொறுத்தவரை குடும்ப உறவினர்கள், நண்பர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் மூலமே அதிக தொல்லை ஏற்படுவதாகவும், அதே வேளையில், 94 சதவீதம் மாணவிகள் எங்கெங்கு தொடுவது தவறானது. எங்கெங்கு தொட்டால் பிரச்சினை இல்லை என்பதை உணர்ந்து இருக்கிறார்கள் என்றும் தெரிவித்து உள்ளளர்.
சென்னையில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து வரும் மாணவிகள் எந்த மாதிரியான துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்பது குறித்து சென்னை மருத்துவக் கல்லூரி டாக்டர்கள் குழுவினர் ஒரு ஆய்வை நடத்தி இருக்கிறார்கள். இந்த ஆய்வானது அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படித்து வரும் டினேஜ் மாணவிகளிடம் நடத்தப்பட்டு உள்ளது. 9, 10 மற்றும் 11-ம் வகுப்புகளில் படிக்கும் 300 மாணவிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வு முடிகளை மருத்துவ குழுவினர் வெளியிட்டு உள்ளனர்.
அதில், 13% மாணவிகள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாக தெரிவித்து உள்ளார்கள். அவர்களில் 72% பேர் உடல் ரீதியாகவும், 44% பேர் பாலியல் ரீதியாகவும் தொல்லைகளை அனுபவிப்பதாக தெரிவித்து உள்ளார்கள். 18% மாணவிகள் உடல் ரீதியாகவும், பாலியல் துன்புறுத்தல்களுக்கும் ஆளாவதாக தெரிவித்து உள்ளார். உடல் ரீதியான துன்புறுத்தலை சந்தித்ததில் 82% பேர் தாங்கள் கடுமையாக தாக்கப்பட்டதாகவும், கன்னத்தில் அடி வாங்கியதாகவும் மனக்குமுறலை கொட்டி உள்ளனர். 32% பேர் காலால் மிதிக்கப்பட்டதாகவும், 14% பேர் கீழே தள்ளி விடப்பட்டதாகவும், 7% பேர் தங்களுக்கு சூடு வைக்கப்பட்டதாகவும், 7% சதவீதம் பேர் வீட்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்கள். அதைவிட கொடுமை யாக, 4 சதவீதம் பேர் கட்டி வைத்து அடிக்கப்பட்டு பாலியல் துன்புறுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும்,
பாலியல் துன்புறுத்தல்களை ஒரே ஒரு முறை அனுபவித்தவர்கள் 42 சதவீதம் பேர்.
எப்போதாவது அனுபவித்தவர்கள் 28 சதவீதம் பேர்.
மாதம் ஒரு முறை அனுபவித்தவர்கள் 25 சதவீதம் பேர்.
18 சதவீதம் பேர் பல முறை அனுபவித்து இருக்கிறார்கள்.
பாலியல் துன்புறுத்தல்களை பொறுத்தவரை குடும்ப உறுப்பினர்களான, தந்தை, நண்பர்கள், உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் மூலமே அதிக அளவு பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
அதே வேளையில் 94 சதவீதம் மாணவிகளுக்கு பாலியல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட்டு இருப்பதாகவும், உடலில் எந்தெந்த பாகங்களில் தொடுவது தவறானது. எங்கெங்கு தொட்டால் பிரச்சினை இல்லை என்பதை உணர்ந்து இருக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.
பாலியல் கொடுமைக்கு ஆளாகும் மாணவிகள், தனது தாய் அல்லது நண்பர்களிடம் தான் முதன்முதலில் சொல்கிறார்கள்.
இதுபோன்ற பாலியல் தொல்லைகளில் இருந்து, மாணவிகளை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் அரசுக்கு ஆய்வு குழுவினர் சுட்டிக் காட்டி உள்ளார்கள்.
அதுபோல சைல்டு நெட் தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில், டீன் ஏஜ் பெண்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கினர் தங்கள் வயதுடைய குழந்தைகளால் ஆன்லைனில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர் என்று தெரிவக்கப்பட்டு உள்ளது.
11% சிறுவர்களுடன் ஒப்பிடுகையில், 13-17 வயதுடைய பெண்களில் 31% தேவையற்ற பாலியல் கவனத்திற்கு இலக்காகியுள்ளனர். நேர்காணல் செய்யப்பட்ட 1,559 பதின்ம வயதினரில் 10 பேரில் ஒருவர் கற்பழிப்பு உட்பட பாலியல் வன்முறை அச்சுறுத்தல்களைப் பெற்றதாகப் புகாரளித்தனர். ஆய்வில், 26% டீனேஜர்கள் தங்கள் பாலியல் நடத்தை பற்றிய ஆன்லைன் வதந்திகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12% பதின்வயதினர் நிர்வாணப் படங்களைப் பகிருமாறு கூட்டாளர்களால் வற்புறுத்தப்பட்டதாகக் தெரிவித்துஉள்ளனர்.
33% பெண்கள் மற்றும் 14% சிறுவர்கள் ஆன்லைனில் பகிரும் படங்களில் பாலியல் கருத்துகளைப் பதிவு செய்கிறார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.
யாரோ ஒருவர் மற்றொரு நபரின் பாலியல் படங்களை ரகசியமாக எடுத்து ஆன்லைனில் பகிர்வது 23% பேருக்கு தெரியும் என்றும், தங்களது ஒப்புதல் இல்லாமல் பாலியல் படங்கள் எடுக்கப்பட்டு பகிரப்பட்டது என தெரிவித்து உள்ளனர்.
கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் (31%) பாலியல் படங்கள், கருத்துகள் அல்லது செய்திகளைப் பகிர்ந்து கொள்வதற்காக தங்கள் சொந்த வயதுடையவர்கள் போலி சுயவிவரங்களை உருவாக்குவதைக் கண்டுள்ளனர்.
47% இளைஞர்கள் “எளிதாக” பார்க்கப்படும் ஒருவரின் தனிப்பட்ட விவரங்களைப் பகிர்ந்து கொள்ளும் “டாக்ஸிங்” க்கு சாட்சியாக உள்ளனர்.
வாட்ஸ்அப் போன்ற செய்தியிடல் பயன்பாடுகள் முதல் ஸ்னாப்சாட் போன்ற சமூக ஊடக தளங்கள் வரை பல்வேறு தளங்களில் பாலியல் துன்புறுத்தல்கள் நிகழ்ந்ததாக சைல்டு நெட் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.