குடியரசு தின அணி வகுப்புக்காக டெல்லி வந்த ராணுவ வீரர்கள்: 150 பேருக்கு கொரோனா தொற்று

Must read

டெல்லி: குடியரசு தினம், ராணுவ தின அணி வகுப்புகளுக்காக டெல்லி வந்துள்ள ராணுவ வீரர்களில் 150 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

குடியரசு தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தின அணி வகுப்பும், ராணுவ அணிவகுப்பு ஜனவரி 15ம் தேதியும் டெல்லியில் நடத்தப்படும். இந்தாண்டு  குடியரசு தின  அணிவகுப்புகள் அடுத்த மாதம் நடைபெறுகிறது.

அதற்கான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆயிரக்கணக்கான வீரர்கள் டெல்லி வந்து சேர்ந்துள்ளனர். அவ்வாறு டெல்லி வந்த வீரர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது.

சோதனைகளின் முடிவில், 150 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாகவும், அறிகுறிகள் இல்லாததால், டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் அவர்கள் தனிமைபடுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

More articles

Latest article