வாஷிங்டன்: கொரோனா விஷயத்தில் மெத்தனமாக செயல்படும் அமெரிக்க அதிபர் டிரம்பின் நடவடிக்கை காரண மாக, அங்கு பள்ளிகள் திறந்து 2 வாரத்தில் சுமார் 1லட்சம் மாணாக்கர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பில் உலக அளவில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது. இதுவரை 5,566,632 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 2,922,724பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து உள்ளனர். தற்போதைய நிலையில் 2,470,780 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 1,73,128 பேர் மரணமடைந்து உள்ளனர்.
இதற்கிடையில் இந்த ஆண்டு இறுதியில், அங்கு நடைபெற உள்ள அதிபர் தேர்தலை கவனத்தில் கொண்டு, அதிபர் டிரம்ப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மக்களுக்கு நன்மை செய்வதாக கூறி, கொரோனா விஷயத்தி லும் மெத்தனம் காட்டி வருகிறார்.
இதுபோன்ற இக்கட்டான சூழலில், கடந்த மாதம் அமெரிக்காவில் பள்ளி கூடங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை திறக்கவும் அனுமதி வழங்கினார். இதற்கு உலக சுகாதார நிறுவனம் கடும் கண்டனம் தெரிவித்தது. இருந்தாலும் அதை கண்டுகொள்ளாத டிரப் அரசு, கடந்த ஜூலை மாதம் பள்ளிகளை திறந்தார்.
இந்த நிலையில், தற்போது அங்கு பள்ளி மாணவர்கள் ஏராளமானோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ள உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு, பள்ளி மாணவர்களுக்கு நடத்தப் பட்ட கொரோனா சோதனையில் மொத்தம் 97,000 மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக அமெரிக்க அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் அண்ட் சில்ட்ரன்ஸ் ஹாஸ்பிடல் அசோசியேஷன் தெரிவித்து உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்புக்குள்ளான மொத்தம் 5 மில்லியன் பேரிலி, 3,38,000 பேர் குழந்தைகள் என்று கூறியுள்ளது
இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.