மும்பை,

மும்பை அருகே உள்ள பகுதியில்  ரூ.2 கோடி அளவிலான பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

பழைய செல்லாத 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை 10 நோட்டுக்களுக்கு மேல் வைத்திருந்தால் கிரிமினல் குற்றம் என்று மத்தியஅரசு அறிவித்து உள்ளது. நேற்று முதல் இந்த சட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

இந்நிலையில்  மகராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற வாகன சோதனையின்போது ரூ.2 கோடி அளவிலான பழைய நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மும்பை அருகே உளள  தானே பகுதியில்  காவல்துறையினர்  நடத்திய வாகன சோதனையில் இந்த பழைய ரூபாய் நோட்டுக்கள் சிக்கியுள்ளன. அதனை கடத்தி வந்த 6 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த பணம் யாருடையது, எங்கு கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.