சென்னை:
சொகுசு பேருந்தில் கடத்தி வரப்பட்ட தங்கக்கட்டிகள் சோதனையின்போது கைப்பற்றப்பட்டது. இதன் காரணமாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழக ஆந்திர எல்லையோர பகுதியான கும்மிடிப்பூண்டி ஆரம்பாக்கத்தில் சோதனைச் சாவடி உள்ளது.
ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் இருந்து சென்னைக்கு வந்த சொகுசு பேருந்து ஒன்றை, சோதனச்சாவடியில் நிறுத்தி மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.
பயணிகள் போர்வையில் வந்த நால்வர், 3360 கிராம் எடை கொண்ட 20 தங்க பார்களை கடத்தி வந்தது தெரியவந்தது.
அவற்றை பறிமுதல் செய்த போலீசார் நால்வரையும் கைது செய்தனர்.
Patrikai.com official YouTube Channel