சென்னை:
ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் நதிகள் பாதுகாப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சுத்தமான கூவம் ( National Disaster Response Force (NDRF)) திட்டத்தின் கீழ் கூவம் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டது. இந்த திட்டத்தில் கலந்துகொண்டு தமிழக கவர்னர் பன்வாரிலால் கூவம் அருகே உள்ள குப்பைகளை அகற்றி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், நதிகளை பாதுகாப்பதற்கு விரிவான திட்டம் இல்லாததுதான், ஆறுகளில் மாசுபாடு அதிகரிப்பதற்கு காரணம் என்று கூறினார்.
மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் தேசிய பேரிடர் மீட்பு குழு சார்பில் பாதுகாப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிகழ்வின் தொடக்கமாக பேரிடர் மீட்பு படையினர் சென்னை சேப்பாக்கம் பகுதியில் உள்ள பெரியார் பாலம் அருகே கூவம் நதிக்கரையை தூய்மைபடுத்தும் பணியை ஆளுநர் பன்வாரி லால் புரோகித் தொடங்கிவைத்தார். இந்த நதி மறுசீரமைப்பில் 1,500 தன்னார்வலர்கள் ஈடுபட உள்ளனர்.
நிகழ்ச்சியில் பேசிய கவர்னர், இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை கூவம் ஆறு சுத்தமான நதியாக இருந்தது எனவும், பண்டைய காலங்களில் தென்னிந்தியாவின் தொலைதூர கடல் வர்த்தகத்தில் கூவம் ஆறு ஒரு முக்கிய பங்கை கொண்டிருந்தது என்றும் அவர் கூறினார்.
1950 ஆம் ஆண்டு வரை கூவம் ஆற்றில் 49 வகையான மீன்கள் இருந்ததாவும், தற்போது மாசுபாடு காரணமாக கூவம் ஆற்றில் மீன்களே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும். கூவம் மற்றும் அடையாறு நதிகளை 1950 மற்றும் மற்றும் 1960 களில் இருந்த தரத்திற்கு மீட்டெடுப்பதற்கான ஒரு கூட்டு பொறுப்பு சென்னை குடியிருப்பாளர்களுக்கு உள்ளது என்றும் வலியுறுத்தினார்.