https://www.facebook.com/indrans.actor/videos/2511129585867753/

கொரோனா வைரஸ் நோயின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் உலகமே தடுமாறிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு என அறிவிக்கப்பட்டு அனைவரும் வீட்டில் முடங்கியுள்ளனர் .

சூழ்நிலை இப்படி இருக்க அத்யாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்பவர்கள் தங்கள் முகத்தை மாஸ்க் போட்டு மூடி கொண்டு செல்ல வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் மாஸ்க் தட்டுப்பாடு காரணமாக கடைகளில் கிடைப்பது இல்லை என்கிற குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில் பிரபல மலையாள நடிகர் இந்திரன்ஸ் தான் ஜெயிலுக்குள் சென்று அங்கிருக்கும் கைதிகள் உடன் சேர்ந்து மாஸ்க் தைத்த விடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

இந்திரன்ஸ் சினிமாவில் நடிக்க வரும் முன்பு டெய்லராக தான் பணியாற்றிக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.