டெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள, திரவுபதி முர்மு இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
குடியரசுத் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்மு போட்டி யிடுகிறார். எதிர்க்கட்சி சார்பில் பொதுவேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான முர்மு இன்று மாநிலங்களவை செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். முர்முவின் வேட்பு மனுவை பிரதமர் மோடி முன்மொழிந்தார். .அவருடன் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் உடனிருந்தனர்.
திரவுபதி முர்முவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தியதற்காக நாட்டு மக்கள் குறிப்பாக பழங்குடியினர் பெருமிதம் கொள்கின்றனர். இது வரலாற்றுச் சிறப்புமிக்கது: டெல்லியில் உள்ள நாடாளுமன்ற நூலகக் கட்டிடத்தில் பழங்குடியினர் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா தெரிவித்துள்ளார்.